பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார். அதன்படி தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள், சோனா மீனா தியேட்டர் எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்தும். புதுக்கோட்டை மார்க்கம், சொல்லக்கூடிய பேருந்துகள், டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தும். மதுரை மார்க்கம் செல்லக்கூடிய பேருந்துகள், மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்தில் இருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி / ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.
மற்ற வெளியூர் செல்லும் பேருந்துகளில் வழித்தடங்களில் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்றுகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்களில் பொது மக்களுக்கு இன்னல்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் திருச்சி மாநகரில் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.