தை முதல் நாளான நேற்று தைப்பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. து. இந்த நிலையில், தை 2வது நாளான இன்று மாட்டுப்பொங்கல் கோலாகலமாக கொண்டாட்டது. உயிர்வாழ்வதற்கான ஆதாரமான உணவை படைக்கும் விவசாயத்தையும், அதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனையும் வணங்கும் விதமாகவே அறுவடை நாளான தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும் அந்த விவசாயத்திற்கு விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ள மாடுகளுக்காக ( கால்நடைகள்) கொண்டாடப்படுவதே மாட்டுப்பொங்கல் ஆகும். காளை மாடுகள் விவசாயத்திற்கும், ஜல்லிக்கட்டிற்கும் களமிறங்கினாலும் பசுமாடுகள் பால் தருவது உள்ளிட்டவை மூலம் மனிதனுக்கு வருமானத்தையும் அள்ளித்தந்து கொண்டிருக்கிறது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகள் வசிக்கும் தொழுவத்தை மக்கள் நன்கு சுத்தம் செய்கின்றனர். பின்பு, மாடுகளை குளிப்பாட்டி அவைகளை புத்துணர்ச்சி ஆக்கின்றனர். ஏற்கனவே மாடுகளின் கொம்புகளுக்கு புதிய வர்ணம் தீட்டி அலங்கரித்து வைத்திருப்பார்கள்.அதன் கால்களிலும், கழுத்துகளிலும் சலங்கைகளை கட்டி அழகு பார்ப்பதுடன், மாடுகளுக்கு இன்றைய தினத்தில் புதிய மூக்கணாங்கயிறு, தாம்பு கயிறு ஆகியவை அணிவித்து அவற்றிக்கு பொங்கல் படைத்து கற்பூரம் காட்டி வணங்குவார்கள்…
Tags:மாட்டுப்பொங்கல்