தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும் உள்ளார். கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலங்களில் இன்று ஆளுநர் தமிழிசை தேசியக் கொடியேற்றினார். போன ஆண்டு போல் இந்த முறையும் தெலங்கானாவில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் தனி விமானம் மூலம் புதுவைக்கு வந்து காலை 9.30 மணியளவில் புதுவை கடற்கரை சாலையில் தேசியக்கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 9.30 மணிக்கு தொடங்கவிருந்த விழா 10.30 மணிக்கு துவங்கியது.. இதனால் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விழாவிற்கு வந்திருந்த முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என அனைவரும் அவதிக்குள்ளாகினர். விழா முடிந்ததும் துணைநிலை ஆளுநர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது.. குடியரசு தினவிழாவில் பங்கேற்று 8.06க்கு தெலங்கானாவில் இருந்து கிளம்பினேன். 9.06க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அனுமதியில்லாததால் விமானம் வானில் சுற்றிக் கொண்டிருந்தது. தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும்கூட, என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என்றார் ஆளுநர் தமிழிசை.. .
