கோவை மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்கிவரும் பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது பொள்ளாச்சி, , ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்
ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்காக இரண்டு சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் நேற்று
திடீரென ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டது இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் பொள்ளாச்சி வால்பாறை பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர் இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் இருந்த நிலையில் ஒரு மையம் மட்டும் செயல்படுவதால் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து முன்பதிவு செய்ய வேண்டி உள்ளது மேலும் தென் மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளது இதனால் பொதுமக்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில் திடீரென முன்பதிவு சேவை மையத்தை ரயில்வே நிர்வாகம் மூடியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர் எனவே உடனடியாக மூடப்பட்ட முன்பதிவு சேவை மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று ரயில்வே நல சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.