திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (69). இவர் கடந்த 8ம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து பயணத்தின் போது மல்லிகாவின் 9 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.இதுகுறித்து மல்லிகா பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருட்டு வழக்கு சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர்.விசாரணையின் அடிப்படையில் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த அமுதா (39), தேவயானி (23),மீனா (37) ஆகியோர் பொள்ளாச்சி பேருந்து பயணத்தில் மல்லிகாவின் நகை திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.திருட்டு வழக்கில் குற்றவாளிகளான அமுதா, தேவயானி, மீனா ஆகியோர் அசோக் நகர்,வடபழனி, ஜோலார்பேட்டை, உடுமலை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு,அவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…
- by Authour
