Skip to content
Home » பொள்ளாச்சி அருகே ஸ்ரீஅழுக்கு சித்தர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம்..

பொள்ளாச்சி அருகே ஸ்ரீஅழுக்கு சித்தர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம்..

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் ஸ்ரீ ல ஸ்ரீ அழுக்குச் சித்தர் கோவில் மிகவும் பிரபலமானது. தமிழ்நாடு கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வருடம் தோறும் இக்கோவிலில் குரு பூஜை நடைபெற்று வருகிறது. 104வது குருபூஜை முன்னிட்டு பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு தீபாரதனை செய்து வழிபாடு செய்தார் . இதைதொடர்ந்து கோவில் வளாகத்தில் சிவனடியார்களுக்கு பொதுமக்களுக்கும் போர்வை மற்றும் வஸ்திரத்தை வழங்கினார். 5 மாநில தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்

கருத்துக்கணிப்பு பற்றி கேட்டதற்கு குரு பூஜைக்கு வந்துள்ளேன் கருத்துக்கணிப்புகள் பற்றி அசம்பளியில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார், குருபூஜை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையில் ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.குருபூஜையின் போது சிவனடியார்கள் சிவன் பாடல் பாடி பக்தி பரவசத்தை ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!