Skip to content

பொள்ளாச்சியில் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் மனுநீதி பேரணியை துவக்கி வைத்தார் இந்த பேரணியில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், திருவள்ளுவர் திடலில் தொடங்கி ராஜாமில் ரோடு மார்க்கெட் ரோடு வழியாக பேரணி சென்றது இதில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் தலைக்கவசம் அணிவது குறித்தும்,வளைவுப் பகுதிகளில் வாகனங்கள் வேகமாக செல்லக்கூடாது குறிப்பாக மது அருந்துவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது அதிக பாரங்கள் ஏற்றக்கூடாது என கூறி பதகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர், இதில் உதவி இயக்குனர் அருணகிரி,உதவி பொறியாளர் அருள் கார்த்திக் மற்றும் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் சக்திவேல்,முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.