கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,இதை அடுத்து.ஆனைமலை பகுதியில் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போது சுள்ளி மேடு பதி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அப்பகுதியில் போலீசார் தணிக்கை செய்தபோது சுமார் 25 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிடிபட்டது இதனை அடுத்து ஆனைமலை பகுதியைச் சேர்ந்த ஜான் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது…
- by Authour
