Skip to content

பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கிடங்கில் மாங்காய் பலாப்பழம் திராட்சை ஆரஞ்ச் சாத்துக்குடி பைனாப்பிள் மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் கிடங்கின் பின் பகுதியில் சிறிது அளவில் தீ ஏற்பட்ட நிலையில் அது சிறிது நேரத்தில் பழக்கடை உள்ளே தீ பற்றி கிடங்கில் உள்ளே பழங்கள் அடிக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது தீ மள மள வென பற்றி எரிந்தது உடனடியாக தீ அணைப்பு துறையினர்க்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொளுந்து விட்டு எரிந்த தீயை

அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் சம்பவ இடத்தில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது, இந்த தீ விபத்தின் போது கிடங்கில் இருந்த பணியாவார்கள் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை ஏற்பட்டதால் அப்பகுயில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெளியேறினர் . இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!