கோவை, பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு இவர் தனது தாய் மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு கிளம்பி உள்ளனர். இந்நிலையில் இன்று சுமார் 12.30 மணி அளவில் பிரபுவின் வீடு தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதி
மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்க்கு வந்த அவர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து வந்த ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வீடு தீ பற்றி எறிந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும்
இதில் வீட்டில் இருந்த டிவி, கட்டில், உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது என்றும் தீ பற்றியதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.