கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அனைத்து வணிகர் சங்கங்களும் ஒருங்கிணைந்து நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் நகராட்சிகளில் நகரங்களின் விரிவாக்கம் குறித்து 1971 ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்ட விதிகளின்படி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மறுசீராய்வு செய்து வரி வசூல் செய்யப்படுகிறது ஆனால் பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் வரி வசூலில் ஈடுபடாமல் காலம் தாழ்த்தி வந்தனர் இதனால் நகரப் பகுதிகளில் வணிகவளாகங்கள் கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டன
அதனால் கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்ற உத்தரவு பெற்று வணிக வளாகங்கள் தங்கும் விடுதிகள் மருத்துவமனைகள், உணவு விடுதிகள், மருந்துக்கடைகள், மளிகைக் கடைகள்,
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர்
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் அனுமதி பெறாத கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க நகராட்சிக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தார்
உயர்நீதிமன்றம் பொள்ளாச்சி நகராட்சிக்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது அதை ஒட்டி கடந்த மாதம் மகாலிங்கபுரம் பகுதிகளில் செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்களை பூட்டி சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனர்
நகராட்சியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை ,சிறு வியாபாரிகள் சங்கத்தினர் நாளை(செவ்வாய்) ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்திற்கு மளிகை, காய்கறி ,இறைச்சிக் கடை, புகைப்பட கலைஞர்கள் ,மருந்து கடை உரிமையாளர்கள்,ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், ஜவுளி கடைகள் ,செல்போன் கடை உரிமையாளர் சங்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்