கோவை சாலையை சேர்ந்த மோகன் இவர் தனது மாருதி வேனில் வெங்காயம் மார்க்கெட்டுக்கு வந்துள்ளார், பின் மாருதி வேனில் பெட்ரோல் இல்லாததால் பங்க் செல்லும் முன்பு மாருதி வேனில் ஒயர் பழுதாகி இருந்த நிலையில் திடீரென மாருதி வேன் முழுவதும் தீ பரவத் தொடங்கியது, திடீரென தீப்பிடித்ததால் அதிர்ச்சி அடைந்த வேன் உரிமையாளர் மோகன் மாருதி வேனை விட்டு வெளியே ஓடிவிட்டார்,மாருதி வேன் முற்றிலும் தீக்கு இறையானது,தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு மாருதி வேணின் தீயை அணைத்தனர்,மின் ஒயர் கசிவால் திடீரென தீப்பிடித்து மாருதி வேன் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது,மேலும் அருகில் லாரி உரிமையாளர்கள் அசோசியன் பங்க்,தனியார் பங்க் என இரண்டு பங்குகள் உள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.