கடந்த 2005ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 17ம் ஆண்டுகள் நிறைவு பெற்றதால், எனவே உள்ளூர் பக்தர்கள் கோவில் நிர்வாகித்தனர் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது, இதை அடுத்து கும்பாபிஷேக பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. விமான கோபுரங்கள் மற்றும் கோயில் வளாகம் முழுவதும் வண்ணமயமாக மாற்றப்பட்டது மேலும் கடந்த
1953 ஆம் ஆண்டு கோயில் எப்படி காணப்பட்டதோ அதேபோல் வடிவமைக்கப்பட்டு 13 குண்டங்கள் கொண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டது. 23ம் தேதி விநாயகர் வழிபாடு மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கப்பட்ட கும்பாபிஷேக விழா பூஜைகள் நேற்று இரவு யாகசாலை பிரவேசம் முதற்காலை யாக பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகம் பூஜைகள் நடைபெற்றது காலை 9 மணியிலிருந்து 9:44 மணிக்குள் ராஜகோபுரம் மாரியம்மன் அங்காளம்மன் விநாயகர் முருகப்பெருமான் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 17 ஆண்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றதால் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.