கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பஞ்சாயத்து உட்பட்ட சென்னியப்ப பிள்ளை தோட்டம் என்ற தோட்டத்து சாலையில் காளிமுத்து, ராஜேஸ்வரி இருவரும் கடந்த ஒரு வருடமாக பண்ணையம் பார்த்துக் கொண்டு கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இறந்தவர்களின் மகள் கவிதாமணி என்பவர் கோவையில் கணவருடன் வசித்து வருகிறார் கடந்த 9 மாதங்களாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் இறந்து போன ராஜேஸ்வரி என்பவர் கோவையில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து கொண்டு சுகுணா பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து இருந்து வந்துள்ளார் நேற்று மதியம் காளிமுத்து தனது மகள் வீட்டுக்கு சென்று தனது மனைவியை சமாதானம் செய்து தோட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார் , இரவு 9 மணிக்கு மேல் மீண்டும் இருவருக்குள்ளே வாக்குவாதம் ஏற்பட்டதால் மனைவியை தலகாணி வைத்து அமுத்தி கொன்று விட்டு காளிமுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார், இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.