கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதி, ஆத்து பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்த 26 வயதான பசுபதி .இவர் மது போதையில் அம்பராம்பாளையம் சுங்கத்தில் உள்ள பேக்கரியில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடையில் இருந்தவர்கள் பசுபதியை தாக்கியதாக தெரிகிறது.
அங்கிருந்து சென்று பசுபதி ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு சென்று அரிவாளுடன் அம்பராம் பாளையம் பகுதியில் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்து பொள்ளாச்சி ரோட்டில் பெயிண்டிங் வேலைக்கு சென்று விட்டு
(குற்றவாளி)
வீட்டிற்கு திரும்பிய சம்பந்தமில்லாத 40 வயதான கிருஷ்ணன் என்ற நபரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேக்கரியில் நடந்த தகராறு காரணமாக மது போதையில் சாலையில் சென்ற அப்பாவி நபரை கொலை செய்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.