கோவை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வம் பெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனை வசதிகள் குறித்தும், நோயாளிகள் வருகை குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்தனர். ஆய்வை முடித்து கொண்டு சட்டப்பேரவை கணக்கு குழு உறுப்பினர்கள் கிளம்பிய போது மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த நோயாளிகள் கணக்கு குழு உறுப்பினர்களிடம் சரமாரியாக மருத்துவமனை குறித்து புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சரியான நேரத்திற்கு மருத்துவர்கள் வருவதில்லை, நோயாளிகளுக்கு சரியான மருத்துவ பரிசோதனை செய்வதில்லை, பரபரப்பாக அங்கிருந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்து பேசினார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புகார் தெரிவித்த
பெண்ணிடம் உரிய நடவடிக்கை மருத்துவர்களிடம் அறிவுறுத்துவோம் என சொல்லி கிளம்பி சென்றனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வம் பெருந்தகை., ஆய்வுக்கு சென்ற இடத்தில் மருத்துவமனைகளில் காலி பணியர்களை நிரப்ப கோரிக்க வைக்கப்பட்டுள்ளது என்றும் அது விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு கஜானாவில் பணம் இல்லாததால் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் வந்தது, தற்போது தான் நிதிநிலைமை சரியாக வந்து கொண்டிருப்பதால் இனிமேல் அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.