கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடாங்கிபாளையம் , இம்மிடிப்பாளையம் , லட்சுமி நகர் , கிணத்துக்கடவு , பகவதிபாளையம் , கல்லங்காட்டு புதூர் உள்ளிட்ட பகுதியில் பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது கடந்த 5நாட்களாக தேர்தல் பரப்புரையின் போது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்று கிடைத்ததாகவும் குறிப்பாக பெண்கள் உற்சாக வரவேற்பு தருவதாகவும் தெரிவித்தார் மேலும் கிணத்துக்களும் சுற்றுவட்டப் பகுதியில் விவசாயம் சார்ந்த பகுதி இங்கு வேளாண் உற்பத்தி பொருட்கள் பாதுகாக்க குளிர்சாதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இப்பகுதி குடிநீர் பற்றாக்குறை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தை முறைப்படுத்தி
அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் மேலும் தமிழகம் முதல்வர் 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார் இதில் சிலர் விடுபடப்பட்டுள்ளது அவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்
இதில் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் செந்தில் மாவட்ட கவுன்சிலர் ராஜா , நடராஜன் கிணத்துக்கடவு தேர்தல் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.