தமிழகத்தில் முதல்வர் அவர்களின் 70வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக திமுக கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நீதிமன்றம் வளாகம் முன்பு 35 வருடங்களாக செருப்பு தைக்கும் விஜய் பிரதா ப் தொழிலாளிக்கு திமுக மற்றும் ஆதிதிராவிடர் நல குழு சார்பில் வழக்கறிஞர்
பஞ்சலிங்கம் ஏற்பாட்டில்நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் நிழற்குடை வழங்கினர். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது செய்தியாளர்களிடம் பேசிய நகர செயலாளர் தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட இருப்பதாக தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் தர்மராஜ் ,நாச்சிமுத்து வழக்கறிஞர் அணி மருதராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.