கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டது 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இந்த நிலையில் வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொள்ளாச்சி நகர திமுக சார்பில் மருத்துவர் மீரா தலைமையிலான மருத்துவக் குழுவினர் இன்று வயநாடு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்து பாத்திரங்களைக் கொண்டு செல்ல மருத்துவ
குழுவினரை பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா மருத்துவர் குழுவினர் வாகனத்தை பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள் கலைவாணி கண்ணன் ,கந்த மனோகரி தர்மராஜ்,கவிதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான உடன் இருந்தனர்.