பொள்ளாச்சி அருகே கார் நிலை தடுமாறி தென்னை மரத்தில் மோதி தாய், குழந்தை உயிர்ழப்பு. பொள்ளாச்சி- டிச- 13 பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோவிந்தாபுரம் ரோடு பாப்பாத்தி பள்ளம் அருகில்இன்று காலை திருப்பூர் மாவட்டம் அணை புதூரை சேர்ந்த ஆஷா (41)
இவரது மகன்கள் மகன்கள் அனுப்ராஜா (4) அபிலேஸ்வரன் (15) மற்றும் அவரது மகள் அஸ்வதி (21) ஆகியோர்கள் திருப்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் உள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலுக்கு திருப்பூரைச் சேர்ந்த
விமல்ராஜ் (35) (தேவர்)
நண்பரின் காரில் கிளான்ஸா சென்று கொண்டிருந்த போது பாப்பாத்தி பள்ளம் இடத்தில் கார் நிலை தடுமாறி இடது புறம் இருந்த தென்னை மரத்தில் மோதியதில் காரில் பயணம் செய்த ஆஷா (41) மற்றும் அவரது மகன் அனுப்புராஜா (4) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். அபிலேஸ்வரனுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இறந்த இருவரின் பிரேதமும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது,தாய் மகன் இறந்த சம்பவம் குடும்பத்தார் மத்தியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.