கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர்புற பகுதியில் பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது,கோவை, ஊட்டி, ஈரோடு, சேலம், திருப்பூர் என புறநகர் செல்லும் பேருந்து நிலையங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் புதிய பேருந்து நிலையம் அமைக்க பொள்ளாச்சி நகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை அடுத்து கோவை செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 3.1/2 ஏக்கரில் ரூ 7 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்,நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறும்பொழுது பொள்ளாச்சி மக்களின் நலம் கருதி புதிய பேருந்து நிலையம் அமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர், விரைவில் புதிய பேருந்து நிலையம் நிறுவப்படும் என தெரிவித்தார்,இதில் நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி,நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.