Skip to content
Home » ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டாம் விஜய்… திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி..

ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டாம் விஜய்… திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி..

  • by Authour

தேசப்பிதா மகாத்மா காந்தி 1924 – ஆம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி காங்கிரஸ் காங்கிரஸ் பேரியக்கத்தில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்வு எடுக்கப்பட்டார் . அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகே மகாத்மா காந்தி சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சரும்,
தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுக்கரசு தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் அருணாச்சலம் மன்றத்தில் கொடியேற்றப்பட்டது.இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்,திருச்சி கலை, கவுன்சிலர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சோபியா விமலா ராணி,
மாவட்ட பொருளாளர் முரளி,மாவட்டத் துணைத் தலைவர்கள் பட்டேல்,ஷேக் தாவூத், நாச்சி குறிச்சி அருண், கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், இஸ்மாயில் , அழகர், வெங்கடேஷ் காந்தி வெங்கடேஷ் காந்தி மலர் வெங்கடேஷ்,
பரமேஷ் பாலச்சந்தர்,ஐடி பிரிவு கிழக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் அரிசி கடை டேவிட்,ஓ.பி.சி. பிரிவு மாநில செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், கிளமெண்ட், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல்,ஹரிஹரன் தினேஷ்குமார்,அஞ்சு அணி தலைவர்கள் எஸ்.ஆர்.ஆறுமுகம்,பஜார் மைதீன்,
சீலா செலஸ்,அஞ்சு,ராகவேந்திரா, ஆராய்ச்சி மணி,செந்தில் திரு கண்ணன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு பதில், இந்தியா முழுவதும் இருக்கின்ற நதிகளை இணைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடலாம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போன்று மறைந்த தலைவர்களின் பெயர்களை அனைவரும் பயன்படுத்துவது வழக்கம்தான். எம்ஜிஆர் புகழை பலரும் போற்றுகின்றனர்.
ஆனால், அவர் இறந்த பின்பு அவரை யாரும் விமர்சிப்பது இல்லை. அப்படி விமர்சித்தால் மக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் அவரை அரசியல் கட்சித் தலைவர்கள் போற்றுகிறார்கள்.
அந்த வகையில், தவெகா தலைவர் விஜய், எம்ஜிஆரை போற்றுவதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், அவர் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும் என்பது ஏற்புடைய கருத்தல்ல. அது அவரவர்களுடைய விருப்பம். கூட்டம் கூடும் மக்கள் நெரிசலில் சிக்குவார்கள் என்று கூறுவதை தவிர்த்து, மக்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்யக் கூடாது. அப்படி செய்யவும் முடியாது என்பது எனது கருத்து. காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன் கூட, தான் எம்எல்ஏவாக வேண்டும். கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும். தான் மந்திரியாக வேண்டும் என ஆசைப்படுகிறான். நானும் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன் தான். ஆசைப்படுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் அது பேராசையாக இருக்கக் கூடாது. கூட்டணி தலைமையிடம் முன்வைக்க வைக்கவேண்டிய கருத்துக்கள் தொடர்பான கொள்கை முடிவுகளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.