கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை சுமாராகவே இருந்தது.
வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல் அரசியல் பிரவேசம் என்பதால் இத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
வயநாட்டின் சுல்தான் பத்தேரி, கல்பேட்டா, மானந்தவாடி, மலப்புரம் மாவட்டத்தின் எரநாடு, நீலாம்பூர், வாண்டூர், கோழிக்கோட்டின் திருவம்பாடி என வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு இந்த மூன்று மாவட்டங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. வயநாட்டு தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் இங்க இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்த களமிறங்கியுள்ளார் . அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொக்கேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மூவரைத் தவிர பிறர் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் சுமாராக இருந்த வாக்குப்பதிவு பின்னர் விறுவிறுப்படையத் தொடங்கியது.