திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சிறுகாம்பூைரை அடுத்த செங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் (32). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிவந்தார். நேற்று மாலை நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து முசிறி செல்லும் வழியில் தனது புல்லட்டில் விவேக் ஊருக்கு சென்ற போது கொண்டிருந்தார். சிறிய பாலம் பகுதியை அவர் கடந்த போது எதிரில் பஸ் மிக வேகமாக வருவதைக் கண்டு பயந்து போன காவலர் விவேக் தனது புல்லட்டில் இருந்து மேம்பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். அப்பொழுது கீழே இருந்த பாறையில் தலை மோதி படுகாயமடைந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட காவலர் விவேக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விவேக்கிற்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.
டூவீலரில் இருந்து குதித்து தப்பிக்க நினைத்த திருச்சி போலீஸ் பரிதாப சாவு
- by Authour
