Skip to content

காவலர் படுகொலை… கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்தவாரம் முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ஏற்பட்ட தகராறின் காரணமாக நாவார்பட்டி அருகே ஹரிஹரன் என்பவரது தோட்டத்தில் வைத்து காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். காவலருடன் வந்த கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  காவலரை படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும்  100 போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர் தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றனர்.  அப்போது கைது செய்ய சென்ற போலீசாரை பொன்வண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக உசிலம்பட்டி நகர ஆய்வாளர் ஆனந்தன், கஞ்சா வியாபாரியான பொன்வண்ணணை என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது

error: Content is protected !!