அரியலூர் மாவட்டம் ஜெமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். வயது 28. இவர் அரியலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றிவந்தார்.
இன்று காலை ஆயுதபடை காவலர்களுடன், பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் பாதுகாப்பிற்காக, ஜெயங்கொண்டம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிக்கு லீன்குமார் சென்றுள்ளார்.
அங்கு லீன் குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு லீன்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், போலீஸ்காரர் லீன் குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இச்சம்பவம் ஆயுதப்படை போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
