கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, குளித்தலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று மாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் கரூர் நகரத்திற்குட்பட்ட முனியப்பன் கோவில் அருகே 20க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் வாகன சோதனைகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது இருசக்கர ஓட்டுனர்கள் வாகன உரிமம், இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் உள்ளனவா? என சோதனை செய்தனர். மேலும் நான்கு சக்கர ஓட்டுனர்களுக்கு சீட் பெல்ட் அணிந்து செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதே போல் விபத்துக்களை தடுக்கும் வகையிலும், குற்றங்களை தடுக்கும் வகையிலும் கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகள், கார்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி திடீர் சோதனையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டதால் கரூர் மாவட்டம் முழுவதுமே பரபரப்பு காணப்பட்டது.