பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 30.01.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை காவல்துறையினர் எடுத்துக் கொண்டனர். இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அலுவலகங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.இந்த உறுதிமொழியின் போது பெரம்பலூர் மாவட்ட
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவல் சிறப்பு பிரிவுகளிலும் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை காவல்துறையினர் எடுத்துக்கொண்டார்கள்.