Skip to content
Home » திருச்சியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி…

திருச்சியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாநகரத்தில் பொறுப்பேற்றபிறகு, போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களின் நலன் காப்பாற்றியும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ள காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

“போதை பொருள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமலாக்கப்பிரிவு சார்பில் வருகின்ற 11ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து மாபெரும் போதை பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சினை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் முன்னெடுப்பாக, திருச்சி மாநகர காவல்துறை சார்பில் போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து கையெழுத்து இயக்கப் பிரச்சாரம்

நடத்திட மாநகர காவல் ஆணையர் காமினி அறிவுறுத்தியதின் பேரில், நேற்று 09.08.2023ந்தேதி திருச்சி மாநகரத்தில் 4 இடங்களில் மாபெரும் “போதை பொருள்கள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் பிரச்சாரம்” நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பில் போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி, திருச்சி மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கு பெற்ற வாகன பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், ஆகியோர் நீதிமன்றம் அருகில் உள்ள MGR சிலை முன்பு இருந்து வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். பேரணியானது MGR சிலை, ஒத்தக்கடை, தலைமை தபால் நிலையம், TVS டோல்கேட் வழியாக அண்ணா ஸ்டேடியம் சென்றடைந்தது .

பேரணியில் காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் 150 இருசக்கர வாகனங்கள், மாநகர ரோந்து வாகனங்கள் உட்பட சுமார் 300 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டானர்..

பேரணியின் போது போதை பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை விநியோகிக்கப்பட்டது. ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள்

திருச்சி மாநகரில் இதுபோன்று “போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்” தொடர்ந்து நடைபெறும் எனவும், போதைப்பொருள் விற்பவர்கள் மீது தொடர்ந்து சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *