மயிலாடுதுறை தூக்கானங்குளம், கீழ்கரையில் வசிப்பவர் மகேஸ்வரி இவரது கணவர் வினோத். இவரது மாமனார் பாஸ்கர். இவர் கடந்த காலங்களில் அப்பகுதியில் சாராயம், விற்று வந்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு அக்குடும்பத்தினர் சாராய வியாபாரம் செய்யாமல், திருந்தி குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பணியாற்றும், சுபஸ்ரீ, முகிலன் ஆகிய காவல் அதிகாரிகள், கடந்த 18ம் தேதி வீடுபுகுந்து சாராயம் விற்று எங்களுக்கு மாமுல் தரவேண்டும் என மிரட்டி, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து உள்ளனர் .
இதனால் பாதிக்கப்பட்ட மகேஸ்வரி தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். அதில், போலீசார் எங்களை சாராயம் காய்ச்சி விற்கும்படியும், தங்களுக்கு மாமுல் கொடுக்கும்படியும் மிரட்டுகிறார்கள். சாராயம் காய்ச்சாததால் எங்கள் மீதும், உறவினர்கள் மீதும் பொய் வழக்கு போட்டுகொடுமை செய்துவருகிறார்கள். இனியும் எங்களால் உயிரோடு வாழ முடியாது . தாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர். கலெக்டர் சார்பில் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.