தரைக்கடை வியாபாரிகளின் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்தவும், சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், வணிகக் குழு எனப்படும் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்திடவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாறாக கூடுதல் அடாவடி வசூல் செய்வதை கைவிட வேண்டும் மேலும் டெண்டர் முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தரைக்கடை வியாபாரிகள் மீதான அடக்குமுறையை மேற்கொள்ளும் காவல்துறை மற்றும் அரசை கண்டித்து ஏஐடியுசி
தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. திருச்சி தெப்பக்குளம் பகுதியில் திருச்சி மாவட்ட ஏஐடியூசி தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தரைக்கடை வியாபாரிகள் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.