மயிலாப்பூர் துணை கமிஷனர் அரி கிரண் பிரசாத் தலைமையில், கடந்த வாரம் நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் நடந்தது. இதில், ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், அபிராமபுரம், மெரினா, பட்டினப்பாக்கம், ஜாம்பஜார், கோட்டூர்புரம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கோர்ட் பணிகளை கவனிக்கும் போலீசார் கலந்து கொண்டனர். அப்போது, கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை எழுதி வைக்கும் நோட்டு புத்தகத்தை துணை கமிஷனர் சரிபார்த்துள்ளார். அப்போது ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு லாவண்யா, சம்மந்தப்பட்ட நோட்டை சரியாக பராமரிக்காமல், டைரியில் நீதிமன்ற பணிகளை எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து 5 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை கமிஷனர் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளச்சலால் இருந்து வந்த ஏட்டு லாவண்யா மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலக ரைட்டரை செல்போனில் தொடர்பு கொண்டு, நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன், என்று கூறி விட்டு கட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சககாவலர்கள் லாவண்யாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் தனது கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனே, அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் ஏட்டு.. காரணம் என்ன?
- by Authour
