அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலுவைச்சேரி கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வீரச்செல்வன் (24).இவர் ஆண்டிமடத்தில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் சௌந்தர்யா (19) இவர் ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் சௌந்தர்யாவை வீரச்செல்வன் நேற்று சேத்தியாதோப்பு தீப்பாஞ்சம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று இருவரும் திருமணம் செய்துள்ளனர் .இந்நிலையில் ஊருக்கு திரும்பினால் பெற்றோர்களால் பிரச்சனை வரும் என நினைத்த புதுமண காதல் ஜோடிகள் பெற்றோர்களுக்கு பயந்து திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த இருதரப்பு பெற்றோர்களும் தாங்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால் வர மறுத்து விட்டனர். இருப்பினும் பெண்ணின் தாய் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தார். அப்போது அறிவுரைகள் கூறி காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை சௌந்தர்யாவின் தாயார் மற்றும் வீரசெல்வணின் நண்பர்களுடன் அனுப்பி வைத்தனர்.மேலும் பெற்றோர்கள் இடையூறு செய்தால் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கும் படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.