அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன். இவர் மகன் லலித் கிஷோர் (7). இச்சிறுவனுக்கு நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது கடந்த 1 1/2 வருடமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,
மேலும் இச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய, போதிய பொருளாதார வசதியின்மை காரணமாக, சமூக வலைத்தளங்களில் உதவி கேட்டு பதிவிட்டிருந்ததையடுத்து. இதனை அறிந்த அரியலூர் மற்றும் பல்வேறு மாவட்ட காவல்துறையினர்கள் அவருக்கு சமூக வலைதளம் மூலம் உதவி செய்தனர். இதன் மூலம் திரட்டப்பட்ட ரூ.8,39,500 ரூபாய் உதவித்தொகையினை சிறுவனின் அறுவை சிகிச்சைக்காகவும், மேலும் இதர மருத்துவ செலவுக்காகவும், அவரின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், காவலர் ராமச்சந்திரனிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் மணவாளன் அவர்கள், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பத்மநாபன், உதவி ஆய்வாளர் ஆனந்தன் (தனிப்பிரிவு) உடன் இருந்தனர்.