தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது திருச்சி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பங்கேற்ற பொதுக்கூட்டமும் நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகே நடத்தப்பட்டது. இதையொட்டி கடந்த சில தினங்களாக திருச்சி, மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளில் அண்ணாமலையை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. வீதிகள் கொடிகளும் கட்டப்பட்டு இருந்தது. இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன், மண்டல நிர்வாகி சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.