பெண் போலீசார் குறித்து சவுக்கு சங்கர் அவதூறான பேட்டி அளித்தார். அந்த பேட்டியை பெலிக்ஸ் ஜெரால்டு தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார். இது தொடர்பாக பெலிக்ஸ்சை திருச்சி போலீசார் டில்லி சென்று கைது செய்தனர். அவரை தமிழகம் அழைத்து வந்து நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 27ம் தேதி வரை காவலில் வைக்க நீதி்பதி உத்தரவிட்டார். எனவே பெலிக்ஸ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து திருச்சி தனிப்படை போலீசார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டுக்கு சென்று இன்று சோதனை போட்டனர். இந்த சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பதை போலீசார் இன்னும் அறி்விக்கவலில்லை.