கேரளா மாநிலத்தை சேர்ந்த 14 வயது 9-ம் வகுப்பு மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் வந்து விசாரணை செய்தபோது தன்னை தனது தூரத்து உறவினர் மறையமுட்டத்தைச் சேர்ந்த திலீப் (43) என்பவர் கர்ப்பமாக்கியதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஆரியங்கோடு போலீசார் திலீப்பை கைது செய்தனர். திலீப் மறையூர் போலீஸ் ஸ்டேசனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இப்புகாரின் பேரில் போலீசார் அவர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.