Skip to content
Home » போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. திராவிட கழக மாவட்ட தலைவர் தளபதிராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேசினார்.

மதுரையில் காணொலி வாயிலாக மார்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற மயிலாடுதுறை தலைமை நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திராவிட மாடல் ஆட்சியில்தான் இவ்வாறு துணிச்சலாக கேட்க முடியும் மற்வர்களால் கேட்க முடியாது காரணம் மடியில் கணம் பாஜகவினரக்கு கோபம் வந்தால் அதிமுகவினர் படும் பாடு இருக்கே மேல்முறையீடு மேல் முறையீடு நல்ல வேலை நாங்கள் எல்லாம் வக்கீல்கள் என்பதால் வசதியாக உள்ளது. மக்கள்

எந்த கட்சி என்று சொல்வதற்கு மக்கள் முடிவு செய்ய வேண்டுமா இல்லை யாரோ ஒருநீதிபதி முடிவு செய்யவேண்டுமா என்று யோசிக்க வேண்டும், சமூகநீதியாக இருக்ககூடிய செய்தியை செய்யமுடியுமா என்பதை எண்ணிபார்க்க வேண்டும். மிஸ்டு கால் கொடுத்து வளர்வதாக கூறிக் கொள்ளும் பாஜகவில் போலீசால் தேடப்படும் குற்றவாளிகளும், ஏமாற்று பேர்வழிகளுமே இணைந்து வருகின்றனர். குற்றவாளிகள் பாதுகாப்புக்காக அடைக்கலமாகும் இடம் பாரதிய ஜனதா கட்சியாக உள்ளது.

குற்றவாளிகள் அனைவரும் காவி போர்த்திக் கொண்டு வலம் வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளி ஒருவர் அக்கட்சியின் தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைய சென்றபோது, அங்கு பாதுகாப்பு இருந்த போலீசை பார்த்து தன்னைப் பிடிக்கத்தான் காவல்துறை வந்துள்ளது என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினார் அவரை காவல்துறையினர் துரத்தி சென்ற காட்சிகளும் அரங்கேறின. பாஜகவினர் மிஸ்டு கால் கொடுத்து கட்சியில் சேர்க்கின்றனர். இவர்களுக்கு சொந்த காலும் கிடையாது, பந்தகாலும் கிடையாது. இப்போது இவர்களுக்கு தோள் கொடுப்பதற்கு எடப்பாடி கால்தான் உள்ளது என்றார். பேசினார். இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!