கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கூலி தொழிலாளர்கள் 7 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்து தொட்டிக்குள் விழுந்தாக தெரிகிறது. உடன் வேலை பார்க்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மேஸ்திரி குமார் என்பவர் மேலிருந்து மனோஜ்குமாரை அழைத்துள்ளார். பதில் இல்லாததால் அவரும் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது குமாரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அதைபார்த்த சக தொழிலாளர்கள் இருவரையும் சிகிச்சைககாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இவரும் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மனோஜ்குமார் மற்றும் குமார்ஆகியோர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்..
தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 கூலி தொழிலாளர்கள் பலி…..
- by Authour
