சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாத்(40) இவர் தனது சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தார். அங்கு இன்று காலை சபரிநாத்தும், அவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த சாந்தி என்பவரும் தீயில் கருகி இறந்து போனார்கள்.
இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு கீழ் பகுதியில் குடியிருந்து வந்தவர் சாந்தி. இவர்தான் இன்ஸ்பெக்டர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை சமையல் செய்தபோது வீட்டில் பிரிட்ஜ் வெடித்து சிதறி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.