Skip to content
Home » கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த  அதிமுக பிரமுகர் பிரகாஷ்.  இவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில்  கடந்த மாதம் ஒரு புகார்மனு கொடுத்தார். அதில் , முன்னாள் அமைச்சர்  எம்.ஆர் விஜயபாஸ்கர்,  மற்றும் அவரது ஆதரவாளர்கள் கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து  விட்டனர்’ என கூறி இருந்தார்.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  இதைத்தொடர்ந்து விஜயபாஸ்கர் தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கேட்டு  கரூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்ட நி்லையில் நேற்று இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கைது செய்யப்பட்டார். கேரளாவில் பதுங்கி இருந்த அவரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இந்த  வழக்கில்  விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக காவல் சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிரித்விராஜை சிபிசிஐடி போலீஸ் கரூரில் கைது செய்தது. 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பிரித்விராஜ் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

போலி பத்திரப்பதிவுக்கு வில்லிவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் தான்  Non Trasable சான்றிதழ்  கொடுத்துள்ளார்., அதன் மூலம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பத்திரப்பதிவு செய்துள்ளார். நில உரிமையாளர் பிரகாஷ் புகாரில், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கரூர் சார்-பதிவாளர் விசாரித்தபோது சான்றிதழ் ஏதும் தரவில்லை என தகவல் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!