திருச்சி மாவட்டம் லால்குடி வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர் கலைப்புலி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலைப்புலி ராஜாவின் நண்பர்கள் மது விருந்து நடத்தி உள்ளனர். அங்கு நவீன்குமாரையும் அழைத்து வந்து மது கொடுத்துள்ளனர். அப்போது நவீன்குமாரை கலைப்புலி ராஜாவும் அவரது நண்பர்களும் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக உடனடியாக பாலா, ஸ்ரீநாத் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கலைப்புலி ராஜா உள்பட மற்றவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலைக்கு முக்கிய காரணமான கலைப்புலி ராஜா திருச்சி அடுத்த சிறுகனூர் காப்பு காடுகளில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து இன்று காலை அங்கு சென்று உள்ளனர். அப்போது அவர் போலீசாரை திடீரென தாக்கினார். இதனால் போலீசார் தற்காப்புக்காக சுட்டனர். இதில் கலைப்புலி ராஜாவுக்கு காலில் குண்டு பாய்ந்தது.
உடனடியாக அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்படுகிறது . இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி்உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட கலைப்புலி ராஜா மீது பல வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.