திருச்சி குழுமாயி அம்மன் கோயில் இன்று மதியம் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் தேடிச்சென்றனர். அப்போது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடிகள் துரை என்கிற துரைசாதைி, சோமு என்கிற சோமசுந்தரம் அங்கு பதுங்கி இரு்நதனர்.
அண்ணன், தம்பிகளான இவர்கள் போலீசாரை கண்டதும் திடீரென அரிவாளால் வெட்டி போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். போலீசார் சுதாரித்துக்கொண்டு ரவுடிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 3 ரவுண்ட்கள் சுட்டதில் ரவுடிகள் இருவருக்கும் கால், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தனர்.
உடனடியாக ரவுடிகளை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ரவுடிகள் வெட்டியதில் காயமடைந்த போலீசாருக்கும், ரவுடிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்வம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்தவாரம் கோவையில் போலீசார் என்கவுன்டர் நடத்திய நிலையில் இப்போது திருச்சியிலும் என்கவுன்டர் நடந்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரவுடிகள் இனி துப்பாக்கி முனையில் பிடிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதனால் ரவுடிகள் இனி தப்பி ஓடிவிடலாம், வெளிமாநிலத்துக்கு சென்று விடலாம் என கதிகலங்கி போய்உள்ளதாக கூறப்படுகிறது.