Skip to content

சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில்  இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சம்மனை  கதவில் ஒட்டிய நோக்கம் என்ன?  நான்  ஓடிப்போகப்போறது இல்லை.  சம்மனை ஒட்டுவதால் கதவு பாழாகிறது என்பதற்காக போர்டு  வைத்து உள்ளோம்.  நான் வெளியூரில் இருப்பது தெரிந்தும் கதவில் ஒட்டி உள்ளனர்.  என் மனைவியிடம் கொடுத்திருக்கலாம்.

நாற்காலியில்  நிரந்தரமாக இருப்போம் என்ற திமிறில்   செய்கிறார்கள்.  எதற்காக இந்த வேலையை செய்கிறீர்கள்.  வளசரவாக்கம்  காவல் துறை  சம்மனுக்கு நீலாங்கரை போலீசார் வந்தது ஏன்.? என்ன பாலியல் வழக்கு,? ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள்.   வயசுக்கு வந்த பொண்ணை தூக்கிட்டு போய் சோள காட்டில  வைத்து கற்பழித்தது போல  பேசுகிறீர்கள்?  என்னடா  நாடகம்?  சம்மன் நான் படிக்கவா,  நாட்டு மக்கள் படிக்கவா? சம்மன் கிழித்தது  அவ்வளவு பெரிய குற்றமா?

234  தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட தயாரா,  கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா என பார்ப்போம்?    நான் தான் பெரிய தலைவன். எத்தனை வழக்கு போட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது.  இந்த பூச்சாண்டி எல்லாம் வேண்டாம்.  வருவேன்னா,  வருவேன்.    நினைக்கும்போது தான் வருவேன். வரலாறு சுழன்று கொண்டு தான் இருக்கும்.   உங்க அப்பா என்னை பொடாவில் போட்டார். நான் பயந்தது போல  தெரியுதா,  தமிழ்நாட்டில் அதிக வழக்கு என் மீது தான்  போடப்பட்டு உள்ளது.

8ம் தேதி வரை எனக்கு வேலை இருக்கு .ரொம்ப ஆர்வப்படுகிறார்கள்.  கலந்தாய்வு முடிந்த பிறகு  நேரம் இருக்கா என பார்ப்போம்.  மாலை 6 மணிக்கு மேல்  போக லாம் என  இருக்கிறேன்.  அந்த அம்மாவ  வீட்டுல போய் பார்த்து விசாரிப்பாங்க, என்னை மட்டும்  போலீஸ் நிலையம் வரச்சொல்வாங்க.

ஒரு வருடத்தில 7 முறை கரு கலைத்த சாதனையாளர் நானாகத்தான் இருப்பேன்.  திருமணமாகி விட்டது என்று சொல்லும் நீங்கள், திருமண சான்றை கேட்க மாட்டீர்கள். உங்களுக்கு இந்த  கதை கேட்பது எல்லாம்  சுவாராஸ்யமாக போய்விட்டது.  கஷ்டமாக இருக்கிறது என்றதால்  விஜயலட்சுமிக்கு உதவினேன்.  தம்பிகள் பணம் கொடுத்து உதவியிருக்கலாம்.  இப்போது நானே தெருக்கோடியில் நிற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!