தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர். அ.கா. விசுவநாதன், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் சீமா அக்ரவால், ஆகியோர் சந்தித்து, 2023-2024 ஆம் ஆண்டிற்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.