Skip to content

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது,

கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வருட வருடம் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நூற்றாண்டு கல்வி உதவித்தொகை, 16- காவலர்களின் குழந்தைகளுக்கு இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்அப்துல்லா IPS., வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!