புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் மது தொடர்பான வழக்குகளில்
சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர வாகனம் ஒன்று,
மற்றும் இருசக்கர வாகனம் 17 ஆக மொத்தம் 18 வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் துணை இயக்குனர்
தானியங்கி பணிமனை அவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, காவல் கண்காணிப்பாளர்
முன்னிலையில் வரும் 22.12.2023 ம் தேதி(வௌ்ளி) காலை8 மணிக்கு புதுக்கோட்டை
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அமைக்கப்பட்ட
குழு முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்பட உள்ளது.
அதுசமயம் ஏலத்தில் கலந்து
கொண்டு ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இருசக்கர வாகனம் எடுக்க முன்பணத்தொகை ரூ.
2,000/- முன்பணத்தொகை ரூ-5,000/- செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தில் கலந்து
கொள்ளலாம். ஏலம் எடுத்த நபர் ஏலத்தொகையுடன் மாநில அரசிற்கான GST மற்றும்
மத்திய அரசிற்கான GST தொகையுடன் சேர்த்து செலுத்திய பிறகு ஏலம் எடுத்த வாகனம்
ஏலம் எடுத்த நபரிடம் தகுந்த சான்றிதழுடன் ஒப்படைக்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள
விரும்பும் நபர்கள் வாகனத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும்
19.12.2023 மற்றும் 20.12.2023 ம் தேதி காலை 10 மணிமுதல் மதியம் 12 மணி
வரை வாகனத்தை பார்வையிடலாம்.
ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் ஏல
முன் பணத்தொகையை 21.12.2023-ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை
ஆயுதப்படை மைதானத்தில் உள்ள தற்காலிக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.
டோக்கன் இல்லாதவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது. டோக்கன்
பெற்று ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுக்காத நபர்கள் ஏல முன்பணத்தொகை அன்று
மாலை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்த
வாகனத்திற்கு உரிய தொகை செலுத்தாமல் இருந்தால் முன்பணத்தொகையை திருப்பி தர
இயலாது என்பதையும் இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை எஸ்பி. வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார்.
–