திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து மால்வாய் கிராமத்தில் 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் 10 லட்சம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்ற கணவன் – காவலர்களை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு – கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டி
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கீழ அரசூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் லீலாவதி தம்பதியினரின் மகள் பிரியா விற்கும், கீழ அரசூர் அருகே உள்ள மால்வாய் கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன், செல்லம் தம்பதியினர் மகனான அறிவழனுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்காக பிரியா குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்கள் 30 பவுன் நகையும் போட்டு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் ஆகி கடந்த சில நாட்களிலேயே அறிவழகன் மதுபோதையில் மனைவி பிரியாவை தகாத வார்த்தையில் பேசி அடிப்பது அவரது மனைவியை பணம் கேட்டு தொந்தரவு செய்வது என இருந்து வந்துள்ளார்.
மேலும் அறிவழகன் வாழும் வீட்டில் 30 லட்சம் கடன் உள்ளதால் 10 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வா எனவும், மேலும் பிரியாவின் மாமனார் மாமியார் கணவனுடன் சேர்ந்து வாழ விடாமலும் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா என அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் ஆகி 5 வருடங்கள் மேலாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை, குறிப்பாக திருமணம் ஆகி ஒன்றரை வருடத்திலேயே 10 லட்சம் பணத்துடன் வா என அறிவழகன் அவரது மனைவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அடித்து அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவழகன் லால்குடி சார்பு நீதிமன்றத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என வழக்கு தொடுத்த நான்கு நாட்களிலேயே அறிவாழகனின் மனைவி பிரியா கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்காக லால்குடி சார்பு நீதிமன்றத்திற்கு வருகிறார் என தெரிந்து கொண்ட அறிவழகன் உடனே வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு அறிவழகன் சென்று விடுகிறார்.
பின்னர் அடுத்த சில நாட்களிலேயே அறிவழகனின் மனைவி கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என லால்குடி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ஆனால் அறிவழகன் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை விவாகரத்து வேண்டும் என வழக்கு தொடர்ந்து பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விடுகிறார்.
வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 2 வருடங்களாக தாய் தந்தை வீட்டில் இருக்கும் பிரியா, கணவன் அறிவழகன் வெளிநாட்டிலிருந்து வருவதாக தகவல் அறிந்த பிரியா அறிவழனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக மால்வாயிலுள்ள அறிவழகன் வீட்டிற்கு கடந்த மாதம் 25ஆம் தேதி சென்றுள்ளார் அப்போது அறிவழகனின் தாய் தந்தை வீட்டிற்குள் விடாமல் தகாத வார்த்தையில் பேசி அடித்துள்ளனர், மேலும் வெளிநாட்டில் இருக்கும் அறிவழகனுக்கு தகவல் தெரிவித்து பின்னர் கல்லக்குடி காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
கல்லக்குடி போலீசார் தினமும் அறிவழகன் வீட்டில் இருக்கும் பிரியாவை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு மிரட்டி வந்துள்ளனர்.
ஆனால் பிரியா தான் கணவனுடன் வாழ வேண்டும் என வீட்டிலேயே இருப்பதால் பிரியாவின் மாமியார் மாமனார் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். தினமும் கல்லக்குடி போலீசார் தங்களை மிரட்டி வருவதை தடுக்க வேண்டும் மேலும் கணவர் அறிவழனுடன் தன்னை சேர்த்து வாழ வைக்க வேண்டும் என கண்ணீர் மல்க பிரியா தெரிவித்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு கூறும்போது….
தினமும் அறிவழகன் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அறிவழகன் தாய் தந்தையரும் அடித்து துன்புறுத்தி உள்ளனர் தகராறு நடக்கும்போது இது குறித்து கேட்டால் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என மது போதையில் அறிவழகன் பேசுவதாக தெரிவித்தனர்.