தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கோவை மாநகர பகுதியில் உள்ள ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள வரவேற்பாளர் திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வரவேற்பாளர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு உள்ள மென்பொருள் செயலியில், புகார் கொடுக்க வருபவர்கள் கூறும் தகவல் முறையாக பதிவு செய்யப்படுகிறதா?, புகார் தாரர்கள் கொடுக்கும் மனுவுக்கு தீர்வு காணப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் கோவை மாநகர பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க காரணமாக இருந்த போலீசார் மற்றும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு மற்றும் பரிசு தொகையை ஏடிஜிபி சங்கர்
வழங்கினார். 41 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகைகளை வழங் அவர் பாராட்டினார். இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் சந்தீஸ், சிலம்பரசன், சுகன்யா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது…… கோவை மாநகர பகுதியில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது குறித்து கேட்கப்பட்டது.
இதில் சிலர் தங்களுக்கு வரவேண்டிய இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோவை மாநகர பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தினத்தையொட்டி (பிப்ரவரி-14) அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க 2 டி.ஐ.ஜி., 4 போலீஸ் சூப்பிரண்டு, 18 உதவி கமிஷனர்கள், 225 கமாண்டோ போலீசார், 100 அதிவிரைவுப்படை போலீசார் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.