திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சையத் காதர் மகன் சையத் லியாகத் அலி (52) என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அவருடைய தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சையத் லியாகத் அலி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சையத் லியாகத் அலி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதன் காரணமாக நீதிபதி மீனா குமாரி 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 7000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் 10000ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் ஆம்பூர் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சின்ன கண்ணு மகன் விஜயன்(54) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆறு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்ததன் காரணமாக தாய் கொடுத்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் கைது சிறையில் வைத்திருந்தனர் அந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது விஜயன் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் ஐந்து வருடம் சிறை தண்டனை மற்றும் 3000 அபராதம் கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.